அ.தி.மு.க-வை ஆட்டிப்படைக்கும் யார் இந்த கோவை முரளி!

  18
  admk

  தி.மு.க-வின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் சுனில்.பிரஷாந்த் கிஷோர் வருகையையொட்டி அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டது.தி.மு.க-வின் சூச்சமங்கள் அனைத்தும் தெரிந்த சுனிலை அ.தி.மு.க-வின் தேர்தல் வியூகத்தை அமைக்க அழைத்துவரும் வேலையில் கோவை முரளி என்பவர் ஈடுபட்டு வருவதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேசப்படுகிறது.

  அ.தி.மு.க-வை வழிநடத்துவது ஓ.பி.எஸ்ஆ, இ.பி.எஸ்ஆ என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் இருக்க உண்மையில் இவர்கள் அனைவரையும் கோவை முரளி என்பவர் ஆட்டிப்படைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
  தி.மு.க-வின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் சுனில்.பிரஷாந்த் கிஷோர் வருகையையொட்டி அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டது.தி.மு.க-வின் சூச்சமங்கள் அனைத்தும் தெரிந்த சுனிலை அ.தி.மு.க-வின் தேர்தல் வியூகத்தை அமைக்க அழைத்துவரும் வேலையில் கோவை முரளி என்பவர் ஈடுபட்டு வருவதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேசப்படுகிறது.
  யார் இந்த கோவை முரளி என்பதை விசாரித்தபோது உண்மையில் அ.தி.மு.க-வை வழிநடத்தும் நபராக அவர் இருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.டெல்லி பா.ஜ.க-விடம் லாபி செய்து, தமிழக அ.தி.மு.க நிர்வாகிகளை ஆட்டிப் படைக்கும் நபராக கோவை முரளி இருக்கிறார் என்று அ.தி.மு.க-வினர் கூறுகின்றனர்.

  dmk

  சங்கீதா முரளி என்று கோவை மாவட்டத்தில் அறியப்பட்டவர்,டெல்லி சில லாபிகள் செய்து பாஜக வட்டாரத்தில் ஊடுருவினாராம்.தங்கமணி,வேலுமணி என இரண்டு அமைச்சர்களுக்கும் டெல்லி தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தாராம். இதனால் இவர் மீது தங்கமணி, வேலுமணிக்கு ஈர்ப்பு அதிகமானது. இப்போது வேலுமணியின் நிழல்போல செயல்படுகிறார் கோவை முரளி. டெல்லி லாபி காரணமாக முதல்வரின் நெருங்கிய வட்டாரம் ௯ட,முரளியை பார்த்து பயப்படும் சூழல் உருவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

  minister-thamgamani

  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பியூஸ் கோயலுடன் பேசி அ.தி.மு.க  – பா.ஜ.க கூட்டணியை உறுதி செய்தது அமைச்சர் தங்கமணி என்று சொல்வார்கள்.அவருக்கு பின்னணியில் இருந்து அனைத்தையும் செய்தது இவர்தான் என்றும் கூறப்படுகிறது.இவர் திட்டத்தின்படியே அ.தி.மு.க நடப்பதாக கூறப்படுகிறது.தமிழ்நாட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனை எல்லாம் இவர் போட்டுக்கொடுத்த பிளான் என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். 
  அ.தி.மு.க-வின் பலமே தொண்டர்கள்தான்.தொண்டர்களை நம்பாமல் டெல்லியையும்,அங்கு லாபி செய்யும் தரகர்களையும் நம்புவதன் பலனை வரும் தேர்தலில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும் அனுபவிப்பார்கள் என்று அ.தி.மு.க உண்மைத் தொண்டர்கள் கூறிவருகின்றனர்.