அ.தி.மு.க.வில் இணையும் தினகரன்: சர்ச்சையை கிளப்பும் மதுரை ஆதீனம்

  0
  3
  மதுரை ஆதீனம்

  அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

  மதுரை: அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். 

  தினகரனின் புதிய கட்சி

  ttv

  ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த டிடிவி  தினகரன், ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினரானார். இதைத் தொடர்ந்து அதிமுகவுடன் இணைவீர்களா என்று கேட்டதற்கு, அதிமுக விரைவில் எங்களுடன் இணையும் என்று பதிலளித்து அதிரடி கிளப்பினார். ஆனால்  தினகரனுடன் சேரும் எண்ணமில்லை. அவர்கள் அம்மாவுக்குத் துரோகம் செய்தவர்கள்’ என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டணி மாறி மாறி  குறை கூறி வருகின்றனர்.

  அதிமுகவில் இணையும் டிடிவி 

  ttv

  அதிமுகவின் தீவிர விசுவாசியான மதுரை ஆதீனம். ஆன்மீகத்தை விட அதிமுகவை எண்ணி தான் நிறைய கவலைப்படுகிறார்.  அந்த வகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், ‘ அதிமுகவில் தினகரனை இணைக்கும் பணிநடந்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் யார் யார் உள்ளார்கள் என்பதை என்னால் இப்போது வெளிப்படையாகக் கூற இயலாது. தேர்தலுக்குப் பின்னர், அதிமுகவில் தினகரன் இணையும் காலம் வரும்’ என்றார். 

  வாக்கு பலிக்குமா? 

  athinam

  முன்னதாக, ஒருமுறை கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதீனம்,  பேச்சுவார்த்தை நடக்கிறது. நிச்சயமாக டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார் என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் மதுரை ஆதீனம் கூறியது ஆதாரமற்றது என்று மறுப்பு தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் மதுரை ஆதீனம்  இதே கருத்தை முன் வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  இதையும் வாசிக்க: காதலனின் மனைவியை கொலை செய்த காதலி; மூன்று மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த போலீசார்!