அஸ்ஸாமில் மருத்துவமனையாக மாறும் ஸ்டேடியம்! – பணிகள் தீவிரம்

  15
  assam stadium

  நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஓய்வு பெற்ற மற்றும் தனியார் மருத்துவர்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ரயில் பெட்டிகளைக் கூட வார்டாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

  அஸ்ஸாமில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஸ்டேடியத்தை மருத்துவ மையமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
  நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஓய்வு பெற்ற மற்றும் தனியார் மருத்துவர்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ரயில் பெட்டிகளைக் கூட வார்டாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

  isolation-wards

  இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் குவாஹத்தி நகரில் உள்ள இந்திரா காந்தி அத்லடிக் ஸ்டேடியத்தை மருத்துவ மையமாக மாற்றும் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. அஸ்ஸாமில் இதுவரை கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், நிலைமையை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.