அவெஞ்சர்ஸ் படம் பார்த்து உயிருக்கு போராடிய இளம்பெண்! 

  0
  3
  அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

  சினாவில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேமை படம் பார்த்து அழுகையை கட்டுப்படுத்த முடியாத இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  சென்னை: சீனாவில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் பார்த்து அழுகையை கட்டுப்படுத்த முடியாத இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  கடந்த வாரம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகளவில் நல்ல வசூலையும் இந்த படம் பெற்றுள்ளது. மேலும் எந்த  ஒரு ஹாலிவுட் படத்திற்கும் கிடைக்காத மிகப்பெரிய வரவேற்பு இப்படத்திற்கு இந்தியாவில் கிடைத்துள்ளது. 

  avengers end game

  இன்னும் வரை கூட டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படம்  கடைசி படம் என்பதால் இறுதியில் இதில் உள்ள இரண்டு முக்கிய கேரக்டர்கள் இறந்து போய்விடுகின்றனர். இதனை பார்த்த பல அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்து வருகின்றனர். 

  இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சீனாவின் இளம்பெண்(21வயது) ஒருவர், அந்த இரண்டு கேரக்டர்கள் இறந்து போனதை தாங்க முடியாமல் தேம்பி தேம்பி அழுதுள்ளார். தொடர்ச்சியாக அழுததால் ஒரு கட்டத்தில் அவரால் மூச்சுவிட முடியாமல் போய்விட்டது. 

  அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

  இதனையடுத்து அவரது தோழி அந்த இளம்பெண்ணை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்பு மருத்துவர்கள் உடனடியாக ஆக்சிஜன் கொடுத்து உயிரை காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவம் சீனாவின் சமூக வலைத்தளத்தில் வைரலாகியதுடன், இந்த படத்திற்கு பெரும் புரமோஷனாகவும் அமைந்துள்ளது.