“அவர் மீதான பிரம்மிப்பு இன்னும் அதிகரித்துவிட்டது” மோகன்லாலைப் புகழ்ந்த அமிதாப் பச்சன்!

  0
  1
  mohanlal and big b

  அமிதாப் பச்சனின் நெருக்கமான நண்பரான மோகன்லால், தனது படத்தின் டிரெய்லரைப் பார்க்குமாறு அவரைப் கேட்டுக்கொண்டுள்ளார். அமிதாப் பச்சன் டிரெய்லரைப் பார்த்துவிட்டு தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் “நான் இதுவரை பிரம்மிக்கும் மலையாள சினிமா நடிகரும் என் அருமை நண்பருமான மோகன்லால் அவரது புதிய படத்தின் டிரெய்லரைப் பார்க்கமாறு கேட்டுக்கொண்டார்.

  மலையாளத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள மோகன்லால் நடித்துள்ள ’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் டிரெய்லர் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. படத்தின் காட்சிகள் ஒவ்வொரும் பிரமிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருந்தன. 

  mohanlal-89

  மரைக்காயர் படத்தில் மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதசர்ஷன், பிரபு, ஆக்ஷன் கிங் அர்ஜுன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இது தவிர பல வெளிநாட்டு நடிகர்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

  mohanlal-movie-89

  அமிதாப் பச்சனின் நெருக்கமான நண்பரான மோகன்லால், தனது படத்தின் டிரெய்லரைப் பார்க்குமாறு அவரைப் கேட்டுக்கொண்டுள்ளார். அமிதாப் பச்சன் டிரெய்லரைப் பார்த்துவிட்டு தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் “நான் இதுவரை பிரம்மிக்கும் மலையாள சினிமா நடிகரும் என் அருமை நண்பருமான மோகன்லால் அவரது புதிய படத்தின் டிரெய்லரைப் பார்க்கமாறு கேட்டுக்கொண்டார். பார்த்தேன் , பார்த்த பிறகு அவர் மீதான பிரமிப்பு இன்னும் அதிகமாகிவிட்டது” என்று பதிவிருந்தார். 

  தனது நண்பரின் இந்த பதிவிற்கு பதிலளித்த மோகன்லால் “அன்புள்ள அமிதாப் பச்சன், நீங்கள் என் மரைக்காயர் பற்றி பேசியதும், படத்தைப் பாராட்டி பகிர்ந்திருப்பதும் எனக்கு கிடைத்த ஆசிர்வாதம், மிக்க நன்றி சார்” என்று பதிவிட்டு நெகிழ்ந்தார்.