‘அவர் என் சகோதரியுடன் படுக்கையறையில் இருப்பார்’… உண்மையைப் போட்டுடைத்த டு பிளெஸ்ஸிஸ் !

  14
  Faf du Plessis sister

  தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் போட்டியான மசான்சி சூப்பர் லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை பார்ல் ராக்ஸ் அணியும் நெல்சன் மண்டேலா அணியும் களம் இறங்கின.

  தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் போட்டியான மசான்சி சூப்பர் லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்ல் ராக்ஸ் அணியும் நெல்சன் மண்டேலா அணியும் களம் இறங்கின. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற மண்டேலா அணி பௌலிங்கை தேர்வு செய்தது. பார்ல் ராக்ஸ் அணியின் வீரர்களின் பட்டியலில் மாற்றம் இருந்ததால் அது குறித்து பார்ல் ராக்ஸ் அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் இடம் அது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

  ttn

  அதற்கு டு பிளெஸ்ஸிஸ், வேகப்பந்து வீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோயன் இன்று போட்டியில் கலந்து கொள்ளமாட்டார். ஏனென்றால் அவர் என் சகோதரியுடன் படுக்கை அறையில் இருப்பார் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதற்கு அங்கு இருந்த வர்ணனையாளர் உள்ளிட்ட அனைவரும் சிரித்துள்ளனர். டு பிளெஸ்ஸிஸ் அவ்வாறு கூறிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

   

  டு பிளெஸ்ஸிஸின் சகோதரி ரெமி ரைனஸுக்கும் வேகப்பந்து வீச்சாளர்  ஹார்டஸ் வில்ஜோயனுக்கும் கடந்த சனிக்கிழமை (7.12.2019) திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.