அவரு என்னைத் தூக்கி எறிஞ்தை நீ பாத்தியா? முன்னாள் கணவர் சாண்டிக்கு வக்காலத்து வாங்கிய காஜல் 

  0
  5
  சாண்டி-காஜல்

  பிக் பாஸ் காஜல் தனது முன்னாள் கணவருக்கு வக்காலத்து வாங்கி ஒரு ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

  சென்னை: பிக் பாஸ் காஜல் தனது முன்னாள் கணவருக்கு வக்காலத்து வாங்கி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

  பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்தவர் காஜல். இவர் நடன இயக்குநர் சாண்டியைத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டனர். 

  sandy

  பின்னர் சில்வியா என்பவரைக் கடந்த ஆண்டு சாண்டி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு வயதில் சுசானா (லாலா) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட சாண்டி  தனது நகைச்சுவை தன்மை மூலம் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களையும் சிரிக்க வைத்து வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கடந்த வாரம் வரை நாமினேஷனில் சிக்காமல் வந்த சாண்டி இந்த முறை சிக்கியுள்ளார். அதற்கு முக்கிய காரணம் ஆண்கள் அனைவரும் ஒரு குழுவாகப் பிரிந்து தனித்து செயல் பட சாண்டி தான் காரணம் என்று ஹவுஸ் மேட்ஸ் சிலர் நினைத்துள்ளனர். 

  kajal

  இந்த நிலையில் அந்த அழகான நட்பு  கூட்டத்தை மக்கள் விரும்பி வருவதால் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றனர். தற்போது அந்த நண்பர்கள் கூட்டம் குறித்து சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘சிறப்பான பாஸிட்டிவிட்டி.. உங்கள் வெற்றிக்குச் சந்தோஷத்திற்கும் கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும், லவ் யூ ஆல்’ என்று பதிவிட்டிருந்தார்.   

  kaa

  இதை கண்ட நெட்டிசன் ஒருவர், ‘அந்த கேடு கெட்டவன் உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான்.. நீ அவனுக்குக் கூஜா தூக்கிட்டு திரியுற’ என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்து கடுப்பான காஜல், ‘அவரு என்னைத் தூக்கி எறிஞ்தை நீ பாத்தியா.. உன் அளவுக்கு கீழே இறங்கி பதில் சொல்ல நான் விரும்பல, பரஸ்பர சம்மதம் என்று ஒன்று உள்ளது. மத்தவங்க லைஃப் பத்தி தெரியாமா எல்லாத்துக்கும் கதறாத’ என்று அதில் கோபமாகக் கூறியுள்ளார்.