அவசரமாக தரையிறங்கிய இன்டிகோ விமானம்! தொடரும் விமானக் கோளாறுக்கு காரணம் என்ன?

  0
  5
  இன்டிகோ

  விமான சேவை பாதுகாப்பு என்பது நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. பெங்களூரூ புறப்பட்ட இன்டிகோ விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிரக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  விமான சேவை பாதுகாப்பு என்பது நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. பெங்களூரூ புறப்பட்ட இன்டிகோ விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிரக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  indigo

  மும்பையிலிருந்து ஏ320 நியுயோ என்ற இன்டிகோ விமானம் பெங்களூரூ நோக்கி புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே விமானத்தில் பழுது இருப்பதாக சிக்னல் வந்துள்ளது. இதனால், அவசர அவசரமாக விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது.
  இது குறித்து இன்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை மும்பையிலிருந்து பெங்களூருவுக்கு விமானம் இயக்கப்பட்டது. அப்போது விமானத்தில் ஏதோ கோளாறு இருப்பதாக பைலட்டுக்கு சிக்னல் கிடைத்துள்ளது. வழிகாட்டுதல் நெறிமுறை அடிப்படையில் உடனடியாக விமானம் மும்பைக்கு திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

  engine

  இன்டிகோ விமானம் இயந்திரக் கோளாற்றைச் சந்தித்து தரையிறங்குவது இந்த வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். டிசம்பர் 2ம் தேதி சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்ற விமானம் இப்படி அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. 
  ஏ320 நியோ வகை விமானங்களின் பாதுகாப்பு பற்றி அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்டிரேஷன் எச்சரக்கைவிடுத்துள்ளது. அதில் உடனடியாக சில தொழில்நுட்ப மாற்றங்களை  செய்ய வேண்டும் என்ற அறிவித்துள்ளது. இதை செய்யாவிட்டால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரக்கைவிடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த விமானங்களை மறுசீரமைப்பு செய்யும்படி இந்திய விமான போக்குவரத்து ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. அதற்குள்ளாக இரண்டு அவசரமாகத் தரை இறக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.