அவங்கள மட்டும் கூப்பிட்டு இருக்கீங்க…. நாங்களும் இந்திய சினிமாவுலதான் இருக்கோம்.. மோடியை தாக்கிய நடிகை குஷ்பு

  13
  நடிகை குஷ்பு

  மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு பாலிவுட் நடிகர், நடிகைகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் தென்னந்திய நடிகர்களை அழைக்காததை நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.

  மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடியுடன், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள்  காந்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், அமீர்கான், கங்கனா, சோனம் கபூர் உள்பட பல முன்னணி பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது இந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  மோடி

  பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர்களை அழைக்காமல் பாலிவுட் பிரபலங்களை மட்டுமே அழைத்தது தற்போது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா மோடி சந்திப்புக்கு தென்னந்திய நடிகர்களை அழைக்காதற்கு வேதனை தெரிவித்து முதலில் டிவிட் செய்து இருந்தார். அதனை தொடர்ந்து நடிகை குஷ்புவும் இது தொடர்பாக  டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். 

  மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள்

  குஷ்பூ டிவிட்டரில், இந்திய சினிமான சார்பாக மரியாதைக்குரிய பிரதமரை சந்தித்த அனைவருக்கும் உரிய மரியாதையுடன், இந்தி திரைப்படங்கள் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது பங்களிக்கவோ இல்லை என்பதை இந்திய பிரதமருக்கு நினைவுப்படுத்த வேண்டுகிறேன். தென்னந்திய சினிமாதான் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. தொடரும் என பதிவு செய்து இருந்தார்.