அவங்களுக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயம்: வனிதாவை ரவுண்டு கட்டிய லவ் பேட்ஸ்! 

  0
  5
  வனிதா

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி, மதுமிதா, சரவணன், கஸ்தூரி மற்றும் ரேஷ்மா ஆகியோர் வெளியேறியுள்ளனர். மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா நுழைந்துள்ளார். 

  இந்த நிலையில் நேற்று செம ட்விஸ்ட்டாக ஏற்கனவே வெளியே சென்ற அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்களின் வருகை மீண்டும் பல கலவரங்களை உண்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

  தற்போது இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியா பேசும் சமயத்தில் ஷெரின் மற்றும் வனிதா அவரின் சொந்த வாழ்க்கை குறித்து பேசி வம்பு இழுப்பது போல் உள்ளது. அந்த சண்டையை வழக்கம் போல் அனைவரும் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.

  வழக்கம் போல் டாஸ்க் முடிந்த பிறகு கவின், ‘வனிதாவுக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயம்’ என்று சொல்லி லாஸ்லியவை சமாதானம் செய்கிறார்.