‘அழைப்பு இல்லை என்றால் என்ன.. தொலைக்காட்சியில் பார்ப்பேன்’ – வெதும்பும் மூத்த பிள்ளை மு.க.அழகிரி

  0
  2
  azhagiri

  கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வோம் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

  சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வோம் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

  மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று திறக்கப்பட இருக்கிறது. அந்த விழாவில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சென்னை வந்துள்ளனர்.

  mkstalin

  இந்த விழாவிற்காக, ராயப்பேட்டை YMCA திடலில் அண்ணா அறிவாயலம் போன்ற தோற்ற அமைப்புடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் போதுமான இடம் இல்லை என்பதால், அதுபோன்ற தோற்றத்தில் ராயப்பேட்டை திடலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த பின்னர், அங்கிருந்து பொதுக்கூட்ட மேடைக்கு செல்ல இருக்கின்றனர்.

  இந்த விழாவில் பங்கேற்பதற்காக ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கும் திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், கமல்ஹாசன் மட்டும் மதுரை செல்வதால் விழாவில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

  இப்படி அனைத்தையும் பார்த்து பார்த்து செய்த அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

  kalaignar

  இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “தலைவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு இல்லை. இருந்தாலும் பரவாயில்லை.. நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.

  அரசியல் மனமாட்சியங்களுக்கு அப்பாற்பட்டது, தந்தை-மகன் உறவு என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நினைவில் கொள்ளவில்லை என அவரது ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.