அழகு பெண்களுடன் வலம் வரும் இந்தியாவின் முதல் தனியார் ரயில்! பயணிகள் மகிழ்ச்சி!

  0
  2
   தனியார் ரயில்

  இந்தியாவில் பயணிகள் ரயில் சேவையை தனியார் மயமாக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இது குறித்து நீண்ட நாட்களாக விவாதித்து வந்த நிலையில், முதல் கட்டமாக நீண்ட தூர பயணப் பாதைகளில் செல்லும் வழித்தடங்களில் குறிப்பிட்ட ரயிலை மட்டும் தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் தனியார் ரயிலாக டெல்லி, லக்னோ இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ரயில்வேயின் ஒரு அங்கமான ஐஆர்சிடிசி இந்த ரயிலை இயக்குகிறது. 

  train

  தனியார் மயமானதும் பயணிகளுக்கு சில அதிரடி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பயணிகள் பயணிக்கும் ரயில் தாமதமாக சென்றடைந்தால், அதில் பயணம் செய்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால், 100 ரூபாயும், 2 மணி நேரம் தாமதமானால் 250 ரூபாயும் இழப்பீடு தொகையாக பயணிகளுக்கு வழங்கப்படும்.  இது தவிர, இந்த ரயிலில் பயணம் செய்யும் அனைவருக்குமே தனித்தனியே ஒவ்வொருவருக்கும் 25,00,000 ரூபாய் மதிப்பிலான இலவச பயண காப்பீடு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயிலில் பயணம் செய்யும் போது, ஒருவரில் வீட்டில் திருட்டு நடந்தால், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டமும் இந்த பயண காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகளை வீட்டில் இருந்து ரயில் வரையும், பயணத்தை முடித்தபின் ரயிலில் இருந்து வீடு வரையிலும், கொண்டு சேர்க்கும் பணியையும் ஐஆர்சிடிசி செய்ய உள்ளது. இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

  train

  இது தவிர, விமானங்களில் வழங்கப்படுவதைப் போலவே இந்த ரயிலிலும் சுவையான உணவு வழங்கப்படும் எனவும், இலவசமாக டீ, காபி வழங்கும் மெஷின்களு இந்த ரயிலின் பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களைப் போலவே இந்த ரயிலிலும் அழகு மங்கைகள் பணிப்பெண்களாக வலம் வந்து, பயணிகளுக்கு சேவை செய்வார்கள். வாரத்தின் செவ்வாய்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் இந்த ரயிலில் மொத்தமாக 758 பேர் பயணம் செய்ய முடியும். இந்த தேஜஸ் ரயிலில் லக்னவில் இருந்து டெல்லி வரை பயணிக்க குறைந்தபட்ச கட்டணமாக ரூ1,125 நிர்ணயிக்கப்பட்டுள்ளது!