அலுவலகங்களை காலி செய்த ஆந்திர அரசு

  0
  1
  office

  தெலங்கானாவில் இயங்கி வந்த ஆந்திர அரசு அலுவலகங்கள் காலி செய்யப்பட்டு அமராவதி, குண்டூர், விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டன. 

  ஹைதராபாத்தில் இயங்கி வந்த அனைத்து அலுவலகங்களையும் ஆந்திர அரசு காலி‌ செய்து தெலங்கானா அரசிடம் ஒப்படைத்துள்ளது.

  ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலங்களுக்கு  16 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் தலைநகராக இருக்கும் என பிரிவினை சாசனத்தில் வரையறை செய்யப்பட்டது. இந்நிலையில் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமராவதியை புதிய தலைநகரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவந்தது.

  இதனால் தலைமைச் செயலகம், அரசுத்துறைகள், மாநகராட்சி போன்ற அனைத்தையும் இடமாற்றம் செய்வதில் சிக்கல்கள் நீடித்தன. ‌இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு சில நாட்களிலேயே தெலங்கானாவில் இயங்கி வந்த ஆந்திர அரசு அலுவலகங்கள் காலி செய்யப்பட்டு அமராவதி, குண்டூர், விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டன.