அறுவை சிகிச்சையில் கோளாறு செய்த சவீதா மருத்துவமனை! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…

  0
  3
  saveetha

  செம்பரம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

  செம்பரம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

  செம்பரம்பாக்கம் அருகே தண்டலத்தில் செயல்படும் சவீதா மருத்துவமனையை 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு, மருத்துவமனை வாசலில் அமர்ந்து போரட்டம் .
  நடத்தியதால் பரப்பரப்பு ஏற்பட்டது. குண்ணம் கிராமத்தை சேர்ந்த ரகுபதி என்பவருக்கு கிட்னியில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு  பின் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த ரகுபதி இரவு 8 மணிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

  அதிகாலை 2 மணி வரை மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காததால் ரகுபதி உயிர் இழந்தாக கூறி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் காவல்துறை மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.