அர்ச்சனா மேடம் அப்படியே அந்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்… சோகத்தில் விஜய் ரசிகர்கள்!

  0
  1
  அர்ச்சனா கல்பாத்தி

  இப்படம் முதல் ஐந்து நாட்களில் 200 கோடியை வசூல் செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.

  நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

  bigil

  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில்  நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  தீபாவளிக்கு பெரிய ஆர்ப்பாட்டத்துடன் ரிலீஸான  இப்படம் முதல் ஐந்து நாட்களில் 200 கோடியை வசூல் செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவரையில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இது பற்றி அதிகாரப்பூர்வமாக வாய் திறக்கவில்லை.

  bigil

  இதுகுறித்து பலசெய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. ஆனால்  ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பிலிருந்தனர்.  இதனால் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் கேட்க அவரோ,  கடந்த 15 நாட்களாக டிவிட்டர் பக்கமே தலைகாட்டவில்லை.

  இந்நிலையில்  ஏ.ஜி.எஸ். நிறுவனம்  பிகில்  திரைப்படம் 25ஆவது நாளை  எட்டியது என்று ட்வீட் போட்டிருந்தது. அதை நேற்றிரவு அர்ச்சனா கல்பாத்தி ரீட்வீட்  செய்திருந்தார்.  இதைக் கண்ட விஜய்  ரசிகர்கள்,  வந்ததும் தான் வந்தீங்க அப்படியே எத்தனை கோடி வசூலுக்கு சொல்லிட்டு போயிருக்கலாமே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.