அரையிறுதி போட்டியில் மாஸ் காட்ட போவது இவர் தான்; ஸ்ரீகாந்த் உறுதி !!

  0
  2
   ஸ்ரீகாந்த்

  நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் மிக முக்கிய பங்காற்றுவார் என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஆரூடம் தெரிவித்துள்ளார். 
  12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 

  நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் மிக முக்கிய பங்காற்றுவார் என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஆரூடம் தெரிவித்துள்ளார். 

  srikanth

  12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 
  கடந்த மே மாத இறுதியில் துவங்கிய இந்த தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 
  இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. 
  மான்செஸ்டரில் நடைபெற உள்ள இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்திருக்கும் நிலையில், நியூசிலாந்து அணியை ஜஸ்ப்ரிட் பும்ராஹ் தனது துல்லியமான பந்துவீச்சால் திணறடிப்பார் என முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  bumrah

  இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தும் என்று நம்புகிறேன். நியூசிலாந்து அணியுடனான போட்டியில் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் மிக முக்கிய பங்காற்றுவார் என்று நம்புகிறேன். மற்ற அணிகளை போலவே நியூசிலாந்து அணியும் பும்ராஹ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள நிச்சயம் திணறும்” என்று தெரிவித்துள்ளார்.