அரியணை ஏறும் அரசியல் வாரிசுகள்!

  0
  1
  Tamilachi

  தூத்துக்குடி தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனை தோற்கடித்து முதல்முறையாக மக்களவைக்கு செல்கிறார்.  முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் வெற்றிப்பெற்றும் மீண்டும் எம்பியாகியுள்ளார். 

  தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் களமிறங்கிய வாரிசு வேட்பாளர்களில் 5 பேர் அரியணையில்  ஏறவுள்ளனர். 

  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான, கார்த்தி சிதம்பரம் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 5,66, 104 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேபோல்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமார், தேனி மக்களவைத் தொகுதியில் 5, 4813 வாக்குகளை பெற்று வெற்றி கண்டுள்ளார்.  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியின் மைத்துநருமான விஷ்ணு பிரசாத், ஆரணி தொகுதியில் 6,17, 760 வாக்குகள் பெற்று அரியணை ஏறவுள்ளார். தென்சென்னை மக்களவைத் தொகுதியில் களம் கண்ட, திமுக முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளான தமிழச்சி தங்கப்பாண்டியன், 5, 64, 872 வாக்குகளை பெற்று வெற்றி பெற்று முதல்முறையாக மக்களவை செல்கிறார். மேலும் திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனான கலாநிதி வீராசாமி, வடசென்னை மக்களைத் தொகுதியில் 5 லட்சத்து 89 ஆயிரத்து 34 வாக்குகள் பெற்று வெற்றியை தட்டிச்சென்றுள்ளார். இதேபோல் தூத்துக்குடி தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனை தோற்கடித்து முதல்முறையாக மக்களவைக்கு செல்கிறார்.  முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் வெற்றிப்பெற்றும் மீண்டும் எம்பியாகியுள்ளார்.