அரிசியை கொடுத்து நகைகளை ‘அபேஸ்’ செய்த கொள்ளையர்கள்: ஜோதிடத்தால் ஏமாந்த மாமியார், மருமகள்!

  0
  2
  ராசிபலன்

  ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி, மாமியார், மருமகளிடமிருந்து நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருச்சி : ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி, மாமியார், மருமகளிடமிருந்து நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளப்பொண்ணு. இவரது மருமகள் மீனா. இவர்கள் நேற்று மாலை  வீட்டில் தனியாக இருந்த போது, அங்கு வந்த 2 பேர் தங்களை ஜோதிடம் பார்ப்பவர்கள் என்று கூறி அறிமுகம் செய்துகொண்டனர். இதையடுத்து வெள்ளப்பொண்ணுவும், மீனா அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்களுக்கு  அந்த நபர்கள், ஜோதிடம் பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் சில பிரச்சைகள் இருக்கிறது. அதைத் தீர்த்துவைக்காவிட்டால் குடும்பம் சீரழியும் என்று பயமுறுத்தியுள்ளனர்.

  jewel

  இதனால் பதறிப்போன அவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்க, அதைப் பயன்படுத்திக்கொண்ட அந்த போலி ஜோதிடர்கள், மாமியார், மருமகள் இருவரும் அணிந்திருக்கும் நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு, தாங்கள் கூறும் பரிகாரத்தைச் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அவர்கள் இருவரும் ஜோதிடர்கள் கூறியதுபோல் கழற்றி வைத்துள்ளார்கள். 

  astro

  பிறகு மாமியார், மருமகள் இருவர் கையிலும்  சிறிதளவு அரிசியை கொடுத்த ஜோதிடர்கள், தனித்தனியாக ஒரு அறைக்குள் சென்று எண்ணுமாறு கூற அதையும் நம்பிய  அவர்கள் அரிசியை எண்ணும் வேலையில்  தீவிரம் காட்டியுள்ளனர். பின்பு அறையிலிருந்து வெளியே வந்த பிறகு தான் ஜோதிடர்களும் இல்லை. அவர்களின் நகைகளும் இல்லை என்பது  தெரிந்தது. 

  இதனால் தாங்கள்  ஏமாற்றப்பட்டதை அறிந்த இருவரும் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.  ஜோதிடர்கள் என்று கூறி நூதன முறையில் நகைகளை அபேஸ் செய்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.