அரசு மருத்துவமனைகளில் கட்டாய ‘பயோ மெட்ரிக்’ முறை.. 3 மாதத்திற்குள் அமல்படுத்த உத்தரவு !

  0
  6
  biometric system

  அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 4 மாத காலத்திற்குள் பயோ மெட்ரிக் முறை செயல்படுத்த வேண்டும் கடந்த 2017 ஆம் ஆண்டு என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

  உரிய நேரத்தில் அரசு மருத்துவர்கள் பணிக்கு வராததால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 4 மாத காலத்திற்குள் பயோ மெட்ரிக் முறை செயல்படுத்த வேண்டும் கடந்த 2017 ஆம் ஆண்டு என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பல மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படாததால் தமிழக அரசு மீது நீதிமன்றத்தை அவமதிப்பதாக மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாததால் அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

  ttn

  இன்று அந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனைத்து அரசு மருத்துவமனையிலும் பயோ மெட்ரிக் முறை செயல்படுத்துவதற்கு இன்னும் 6 மாதம் கால அவகாசம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று கூறி, 3 மாத காலத்திற்குள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கட்டாயமாக பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.