அரசு பேருந்து மீது மோதிய தனியார் பேருந்து.. சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு !

  0
  1
  bus

  இறைஞ்சி என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது இவரது கார் அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றின் மீது மோதியது.

  அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஐசக். இவர் இன்று அதிகாலை தூத்துக்குடிக்குச் சென்று விட்டு தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார். இவர்  இறைஞ்சி என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது இவரது கார் அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றின் மீது மோதியது. இதில் ஐசக்கின் கார் சேதம் அடைந்ததால் ஆத்திரம் அடைந்த ஐசக் காரில் இருந்து கீழே இறங்கி அரசு பேருந்து ஓட்டுநரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். நெடுநேரம் பேருந்து செல்லவில்லை என்பதால், பேருந்திலிருந்த 20க்கு மேற்பட்ட பயணிகள் கீழே இறங்கி சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

  ttn

  அப்போது திடீரென திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் ஐசக் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதுமட்டுமில்லாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த 20 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.