அரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது! 

  0
  2
  Harimuthu driver

  அரசு ஓட்டுநருக்கும் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த ஓட்டுநரை அவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

  அரசு ஓட்டுநருக்கும் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த ஓட்டுநரை அவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

  தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ்கள் நிற்கும் பஸ் நிலையம், கரந்தை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள தற்காலிக பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஒரு வாரமாக தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

   இந்த நிலையில் நேற்று பூண்டி மாதா கோவிலில் இருந்து காலை 10.25 மணிக்கு தஞ்சை தற்காலிக பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் வந்தது. பஸ்சை கதிர்வேல் என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் மணக்கரம்பை வந்தபோது ஒரு பெண் பஸ்சில் ஏறி உள்ளார். அவர் கரந்தை அருகே வந்தபோது தற்காலிக பஸ் நிலையத்திற்கு வெளியே கரந்தை போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தன்னை இறக்கி விடுமாறு கூறி உள்ளார்.அதற்கு டிரைவர், அங்கு இறக்கி விட முடியாது. தற்காலிக பஸ் நிலையத்தில்தான் பஸ் நிற்கும் என கூறி உள்ளார். அதன்படி பஸ் பணிமனை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்து நின்றது.

  bus

  இது தொடர்பாக டிரைவருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. டிரைவருக்கு ஆதரவாக பஸ் கண்டக்டரும் வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், செருப்பை கழற்றி டிரைவர் கதிர்வேலை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருடைய பல் உடைந்து கீழே விழுந்தது. இந்த தகவல் பஸ் நிலையத்திற்கு வந்த மற்ற பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் பஸ்சை அப்படி, அப்படியே நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த அந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.