அரசு அதிகாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்… புது காரை எடு… கொண்டாடு…

  0
  1
  Central government

  மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் எத்தனை வானங்கள் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது மத்திய நிதி அமைச்சகக் குழு.

  இந்தியாவில் மத்திய மற்றும் மாநில துறைகளின்செலவை குறைப்பதற்காக புதிய வாகனங்கள் வாங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னாள் தடை விதித்திருந்தது. தற்போது ஆட்டோ மொபைல் துறையில் ஏற்படும் கடும் வீழிச்சியினால் இந்த தடையை விளக்கியுள்ளது மத்திய அரசு. 

  Auto mobile

  சில நாட்களுக்கு முன்னர் மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசுத் துறைக்கு  புதிய வாகனங்கள் வாங்குவதற்கு இருக்கும் தடை விரைவில் நீக்கப் படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அந்த தடை நீக்கப் பட்டு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் எத்தனை வானங்கள் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது மத்திய நிதி அமைச்சகக் குழு.  

  Auto mobile

  வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்வதற்காகவும், வாகன உற்பத்தித்  துறையை மீண்டும் எழச் செய்வதற்காகவும் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.