அரசுப்பள்ளியில் பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

  0
  5
  67952

  புதுடெல்லி: அரசுப்பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன்படி பட்டியலின மாணவர்கள்  350 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி வந்த நிலையில் இனி 1200 ரூபாய் கட்டணமாகச் செலுத்தவேண்டும்.  அதேபோல் பொதுப்பிரிவு மாணவர்கள் 750 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி வந்த  நிலையில் 1500 ரூபாய் செலுத்தவேண்டும் என அறிவித்தது.மேலும் 12ம் வகுப்பு தேர்வில் கூடுதல் பாடம் தேர்வு எழுதுவதற்குப் பட்டியலின மாணவர்கள் இதுவரை கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதை மாற்றி 300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும்  பொதுப்பிரிவினர் செலுத்தி வந்த 150 ரூபாய் கட்டணம்  300 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

  இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை டெல்லி அரசே செலுத்தும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ள மாணவர்களிடமிருந்து  எந்த கட்டணத்தையும் பள்ளி வசூலிக்கக்கூடாது என்று சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.