அரசியல் பேசிக்கிட்டு கிட்ட வந்துறாதீங்க! சூப்பர் ஸ்டார் ரஜினி திடீர் முடிவு !?

  0
  4
  Rajini

  சட்டசபை தேர்தல்தான் எங்களோட இலக்கு! அதனால் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடப் போறதில்லை.கட்சி அறிவிப்பும் அப்பறமா பாத்துக்கலாம் என்று ரஜினி மன்ற நிறைவாகிகளை அழைத்து சொன்னார் சூப்பர் ஸ்டார்

  சட்டசபை தேர்தல்தான் எங்களோட இலக்கு! அதனால் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடப் போறதில்லை.கட்சி அறிவிப்பும் அப்பறமா பாத்துக்கலாம் என்று ரஜினி மன்ற நிறைவாகிகளை அழைத்து சொன்னார் சூப்பர் ஸ்டார்.கூடவே, தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கூடிய கட்சிக்கு வாக்களியுங்கள் என்று அவர் பொத்தாம் பொதுவாக சொன்ன ஸ்டேட்மெண்ட்டும் விமர்சனத்திற்குள்ளானது! 

  அப்பறம், கமல் என் நீண்ட நாளைய நண்பர், அவர் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவேன் என்று கமலைவிட சாமர்த்தியமான வார்த்தைகளில் ‘மய்யம்’மாக பேசினார். இதற்கு மேல் இந்த 2019 தேர்தல் குறித்து எந்த கருத்தையும் சொல்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான ஆட்கள்.

  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்திற்காக சென்னையில் படப்பிடிப்பு  நடத்துவதற்கான இடங்களும் முடிவாகி, செட் ஒர்க் போடும் வேலைகளும் தொடங்கி விட்டது. சென்னை வேண்டாம் மும்பையில் படப்பிடிப்பை வச்சுக்கலாம் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கூப்பிட்டு சொல்லிவிட்டார் சூப்பர் ஸ்டார். அவர் சொன்னா, ஆண்டவனே சொன்ன மாதிரியல்லவா! ஸோ, படத்தின் முக்கால்வாசி படமும் மும்பையில் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.!

  காரணம் ? உள்ளூரில் படப்பிடிப்பு வைத்தால் ,சூப்பர் ஸ்டாரை சந்திக்க யாரவது அரசியல்வாதிகள் வந்து கொண்டே இருப்பார்கள். மனம் திறந்து கேசுவலாக பகிர்ந்து கொள்ளும் தகவல் கூட செய்தியாகும் வாய்ப்பிருக்கிறது.மீடியாக்கள் தேடி வந்தாலும் சிக்கல்!

  அதற்காகவே மும்பைக்கு போகும் பிளானை முன் வைத்திருக்கிறார். ஏப்ரல் முதல் வாரம் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கி இரண்டு மாதம் நடக்கவிருக்கிறது. அதுவரை சென்னை இருக்கும் திசை பக்கம் கூட திரும்ப மாட்டாராம். இதற்கு நடுவே தேர்தல் தேதி இருந்தால் ஓட்டுப்போட மட்டும் ஒரு நாள் வருவார்!

  போகிற போக்கில் இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள்.தலைவர் இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.வாங்க அலெக்ஸ் பாண்டியன் சார்!