அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இல்லை- பிரதமர் மோடி

  13
  modi

  கடந்த 2014 ஆம் ஆண்டுமுதல் மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி ரேடியோ வாயிலாக நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துவார்.

  கடந்த 2014 ஆம் ஆண்டுமுதல் மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி ரேடியோ வாயிலாக நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துவார். இன்றைய மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  “ஆயுதப்படைகளின் கொடி தினமான டிச.,7ம் தேதி, அனைவரும் கொண்டாட முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன். சிபிஎஸ்இ., பள்ளிகளில் ‘பிட் இந்தியா வீக்’ என்ற முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு, யோகா, நடனம் ஆகியவை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியா முழுவதுமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் தொடங்க வேண்டுகோள் விடுகிறேன். 

  Modi

  அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நாட்டில் நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் ஒழுக்கங்கள் எல்லாவற்றிற்கும் மேலானது. அரசியலுக்கு வர வேண்டும் என்று என நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது. நான் புத்தகங்களைப் படிக்கப் பழகினேன், ஆனால் இப்போது முன்புபோல என்னால் படிக்க முடியவில்லை. கூகுள் காரணமாக, வாசிப்பு பழக்கம் மோசமடைந்துள்ளது” என பேசினார்.