அரசியலில் நேரம்தான் வேலை செய்யும் – நடிகர் ரஜினிகாந்த்

  0
  1
  Rajinikanth

  சென்னை எம்.ஆர்.சி நகரில் சாணக்கியா யூடியூப் சேனல் விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். 

  விழாவில் பேசிய அவர், “அரசியலில் நேரம் தான் சரியாக வேலை செய்யும். அரசியலில் ஒரு அலை, ஒரு மூவ்மெண்ட் வரவேண்டும். அலை வந்தால் தான் ஒரு எழுச்சி வரும். எம்.ஜி.ஆர் நடிப்பில் இருந்து அரசியலுக்கு வந்தார். ரொம்ப நல்லவர். கருணாநிதி முதல்வராக இருந்ததில் எம்.ஜி.ஆர் முக்கியமானவர். திமுகவில் இருந்தபோது எம் ஜி.ஆர் கணக்கு கேட்டதால் வெளியே தூக்கி எறியப்பட்டார். அப்போது அவர் மீது மக்களுக்கு அனுதாப அலை வந்தது. அதனால் அவர் வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி படுகொலை நேரம், திமுகவுக்கு எதிரான அலை வந்தது அதனால் தான் ஜெயலலிதா முதல்வர் ஆனார்.அரசியலில் நான் வைத்த புள்ளி தற்போது ஒரு சுழலாக உருவாகியுள்ளது. இதை மக்கள் மத்தியில் தடுக்க முடியாது. வலுவான அலையாக மாற வேண்டும். தேர்தலை நெருங்க, நெருங்க அரசியல் சுனாமியாக மாறும். இது ஆண்டவன் கையில் இருக்கிறது . அது மக்களிடம் தான் இருக்கிறது.

  rajinikanth

  கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விழா நடக்குமா என யோசித்தேன். மிகப் பெரிய தலைவர்களுக்கு விருது அளித்துள்ளனர். கக்கன் அவர்களின் இன்னோரு உருவம்  நல்லக்கண்ணு. அப்படி தான் பார்க்கிறேன். குமரி ஆனந்தன் மற்றும் இல.கணேசனுக்கும் விருது வழங்கியது சிறப்பு.  ஆர்.எஸ்.எஸ் காலத்தில் இருந்தே செயல்பட்டு வருபவர் இல.கணேசன் அவருக்கு விருது பாராட்டதக்கது.  செய்தி என்றால் அரசியலுக்கு ஆர்வம். அரசியலுக்கு நேரம் தான் முக்கியம் என சாணக்கியன் சொன்னார்.