அரசியலில் டூப் போட்டுலாம் நடிக்க முடியாது கமல்…. தமிழிசை கிண்டல்!

  0
  4
  tamilisai

  சினிமாவை போல அரசியலில் டூப் போட்டு நடிக்கலாம் என நடிகர் கமல்ஹாசன் நினைத்துக் கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

  சினிமாவை போல அரசியலில் டூப் போட்டு நடிக்கலாம் என நடிகர் கமல்ஹாசன் நினைத்துக் கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

  பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அவரை தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

  கூட்டத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ஹைட்ரோகார்பன்  திட்டம் தமிழகத்திற்கும் விவசாயிகளுக்கும் எதிரான சதித்திட்டமாக இருந்தால் தமிழக பாஜக அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஆறிக் கொண்டிருக்கும் வடுவை குத்திக் கிளறி ரத்தம் வருமளவிற்கு கமல் பேசிக்கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் இப்படி பேசுவது அரசியல் அனுபவம் இன்மையை தான் வெளிப்படுத்துகிறது. சரித்திர உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். சினிமவை போல், அரசியலிலும் டூப் போட்டு நடிக்கலாம் என்று கமல்ஹாசன் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் சட்டையை தான் கிழிப்பர், ஆனால் மோடி வானத்தை கிழிப்பர்” என்றும் கூறினார்.