அரசியலில் ஆண்கள் இருக்கலாம், பெண்கள் இருப்பது மிக கடினம் – தமிழிசை சவுந்தரராஜன்

  0
  6
  tamilisai soundararajan

  மதுரையில் தனியார் மருத்துவகல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ள தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றார் . 

  மதுரையில் தனியார் மருத்துவகல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ள தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றார் . 

  அதன்பின் மதுரையில் தனியார் மருத்துவகல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றள தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “இந்த காலத்தில் விவேகம் தேவையில்லை வேகம் தான் தேவை. மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கான பரிசு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

   

  அரசியல்வாதி மகள் என்பதால் நான் ஈசியாக மருத்துவம் படிக்க வில்லை. தற்போது படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா இல்லை மருத்துவராக வேண்டும் என நினைக்கிறீர்களா? நீங்கள் படிக்கும் ஒவ்வொரு நாட்களையும் வீணாக்க போகிறீர்களா? இல்லை படிக்க போகிறார்களா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் ஒவ்வொரு நோயாளியை மருத்துவம் பார்க்கும்போது நோயின் தன்மை பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்த பிறகே மருத்துவம் பார்ப்பேன். தேர்வுக்கு முன்னால் படிப்பது நன்மை கிடையாது. எனவே என்னுடைய அறிவுரை என்னவென்றால் மாணவர்கள் அன்றன்றைய பாடங்களை அன்றே படிக்க வேண்டும்.

  tamilisai soundararajan

  வாழ்க்கை என்பது சாதாரணம் கிடையாது நாங்கள் மேடையில் நின்று கொண்டிருக்கிறோம் என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது. அரசியலில் ஆண்கள் இருக்கலாம் அதில் ஒரு பெண்கள் இருப்பது மிக கடினம். படிக்கும் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நானும் படித்த மாணவிதான். பிரச்னைகளை எதிர்கொள்வது தான் வாழ்க்கை. இனி தமிழகத்தில் எந்த தற்கொலையும் நடைபெறக்கூடாது என்பதே என் வேண்டுகோள்” எனக்கூறினார்.