அரசியலா?, விஜய் சேதுபதி படமா?: குழப்பத்தில் ஸ்ருதி

  0
  2
  ஸ்ருதி ஹாசன் - விஜய் சேதுபதி

  தமிழில் ‘சிங்கம் 3’ படத்துக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், விரைவில் ஒரு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார்.

  ஈ, பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்துக்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்த வேளையில், ஸ்ருதி ஹாசன் இதில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது ஸ்ருதி ஹாசன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.

  ஸ்ருதி

  தமிழில் ‘சிங்கம் 3’ படத்துக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், விரைவில் ஒரு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார். தமிழில் அவர் கையெழுத்திடப் போகும் படம் ஜனநாதன் இயக்கும் படம் என கூறப்படுகிறது. ஜனநாதன் படங்களில் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதால், ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படும் என கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது.

  கமல்

  எனினும் ஸ்ருதி ஹாசன் தனது தந்தை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணையப் போகிறார் என்ற செய்தியும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் ஸ்ருதி இதுவரை தனக்கு அரசியலில் விருப்பமில்லை என்றே தெரிவித்து வருகிறார். அதனால் அவரை விஜய் சேதுபதி படத்தில் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதையும் வாசிக்க: நயன்தாரா நடிச்சால் நடிக்கிறேன்,அடம் பிடித்த சிவகார்த்திகேயன்! மிஸ்டர் லோக்கலின் சீக்ரெட்!?