அயோத்தி நிலம் இந்துக்களுக்கே! இஸ்லாமியருக்கு 5 ஏக்கர் மாற்று இடம்!

  0
  1
  அயோத்தி

  அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த உச்சநீதிமன்றம், பாபர் மசூதியின் அடித்தளத்தில் இஸ்லாம்  முறைப்படி இல்லை என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அயோத்தி நிலம் இந்துக்களுக்கே என்றும் இஸ்லாமியருக்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை மூன்று மாத காலத்திற்குள் வக்பு  போர்டுக்கு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 

  ayodhya

  மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும், இதற்கான செயல் திட்டத்தை மூன்று மாத காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இஸ்லாமியர்களுக்கு இந்த 5 ஏக்கர் நிலத்தை 3 மாத காலத்திற்குள்  தரவேண்டும் என்று மத்திய அரசு, உத்திரபிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.