அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு? யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் – வக்பு வாரிய தலைவர்

  0
  1
  ஜாபர் அகமது பாரூக்கி

  உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணம் இல்லை. வழக்கறிஞர் அல்லது தனிநபர்கள் யாரெனும் வக்பு வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதாக கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என வக்பு வாரிய தலைவர் தெரிவித்தார்.

  நீண்ட காலமாக தீர்க்கபடாமல் இருந்த வந்த அயோத்தி நில உரிமை வழக்கில், உச்ச நீதிமன்றம் நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்ட அனுமதித்துடன், மசூதி கட்ட முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.

  அயோத்தி வழக்கு

  அதேசமயம், ராம் ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கை தொடர்ந்த முக்கிய வழக்காளிகளில் ஒன்றான அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் வழக்கறிஞர் ஜிலானி செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் திருப்தி இல்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என நேற்று தெரிவித்தார்.

  வக்கீல் ஜிலானி

  ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணம் இல்லை என வக்பு வாரியத்தின் தலைவர் ஜாபர் அஹமது பாரூகி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். அந்த தீர்ப்பை எதிர்க்கும் எண்ணம் இல்லை. தீர்ப்பு முழுமையாக படித்துவிட்டு அதன் பிறகு அது தொடர்பாக வாரியம் அறிக்கை வெளியிடும். வழக்கறிஞர் அல்லது தனிநபர்கள் யாரெனும் வக்பு வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதாக கூறினால் அதனை சரியானது ஏற்றுக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.