அயோத்தியில் மசூதி கட்ட 5 மாற்று இடங்கள் தேர்வு.. உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு சென்றது.

  0
  8
  அயோத்தி வழக்கு

  அயோத்தியில் முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்காக 5 மாற்று இடங்களை உத்தர பிரதேச அரசு தேர்வு செய்துள்ளது. மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அது அனுப்பட்டுள்ளது.

  பல ஆண்டுகளாக முடியாத வழக்காக இருந்த ராம் ஜென்ம பூமி-அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் பரப்பான தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் இந்துக்கள் கோயில் கட்ட அனுமதி கொடுத்தது. மேலும், முஸ்லிம்கள் வேறு இடத்தில் மசூதி கொள்ள மாற்று இடத்தை அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

  ஆதித்ய நாத்

  இதனையடுத்து, முஸ்லிம்கள் மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய உத்தர பிரதேச அரசு  தொடங்கியது. தற்போது அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக 5 மாற்று இடங்களை உத்தர பிரதேச அரசு தேர்வு செய்துள்ளது. அயோத்தி-பாசியாபாத் சாலை, அயோத்தி-பாஸ்தி சாலை, அயோத்தி சுல்தான்பூர் சாலை, அயோத்தி-கோரக்பூர் மற்றும் பஞ்ச்கோசி பரிக்ரமா ஆகிய 5 இடங்களை மசூதி கட்டுவதற்காக உத்தர பிரதேச அரசு தேர்வு செய்துள்ளது.

  அயோத்தி

  மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெறுவதற்காக அவை அனுப்பப்பட்டுள்ளன. அதேசமயம் அரசு கொடுக்கும் மாற்று இடத்தை பெறுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து சன்னி வக்பு வாரியம் இன்று முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.