அயோத்தியில் அரசு திருமணம் -ஒரு ஜோடிக்கு 75000 ரூபாய் கொடுத்து-500 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம் ….  

  0
  7
  ayodhya

  உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மிகப்பெரிய திருமண விழாவில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 500 தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள மாநில தொழிலாளர் துறை, ஒவ்வொரு தம்பதியினருக்கும் ரூ. 75,000 கொடுக்கும், அதில் ரூ .65,000 மணப்பெண்ணுக்கு போய் சேரும்

  உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மிகப்பெரிய திருமண விழாவில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 500 தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள மாநில தொழிலாளர் துறை, ஒவ்வொரு தம்பதியினருக்கும் ரூ. 75,000 கொடுக்கும், அதில் ரூ .65,000 மணப்பெண்ணுக்கு போய் சேரும். இந்த விழாவில் மாநில தொழிலாளர் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா தலைமையில்   தம்பதிகள் மாலைகளை பரிமாறிக்கொண்டு திருமண சடங்குகளை செய்தனர்.திருமணமானவர்களில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மணமக்களும்  அடங்குவர்.

  amit-shah

  “சுமார் 500 தம்பதிகள் இங்கே திருமண செய்தனர். அவர்களில் 10 பேர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் சொந்த மத சடங்குப்படி  திருமணம் செய்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் ஆட்சியில், அனைவரின் வளர்ச்சிக்கும் எங்கள் துறை உறுதிபூண்டுள்ளது,” என்று மவுரியா கூறினார். அங்கு வந்த தம்பதிகள் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

  “நாங்கள் அரசாங்கத்தின் உதவியால் மகிழ்ச்சியாகவும் திருப்தியுடனும் நன்றியுடனும் இருக்கிறோம். பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வருகிறார்கள், அரசாங்கம் ஒரு பெரிய சேவையை  செய்துள்ளது. நிதிப் பிரச்சினைகள் காரணமாக திருமணம் செய்து கொள்ள முடியாத ஏழை மக்களுக்கு இது மிகப்பெரிய உதவி,” என்று ஒரு மணமகள் அகிலேஷ் குமாரி கூறினார் .