அயோத்தியில் அடிதடி ஆரம்பம்…! சாதுவை ஸ்டேஷனுக்கு கொண்டுபோன போலீஸ்..!?

  0
  1
  ராம்விலாஸ் வேதாந்தி

  ராமர்கோவிலைக் கைபற்ற அயோத்தி சாதுக்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இதில் இரண்டு பேர் முன்னிலையில் இருக்கிறார்கள்.ஒருவர் நிருத்திய கோபால்தாஸ்,இவர் அரசியல் வாதிகள் உள்ளே வரகூடாது என்கிறார். மற்றொருவர் ராம்விலாஸ் வேதாந்தி.சர்ச்சைகளுக்கு பேர் பெற்றவர்.
  முன்னாள் பிஜேபி எம்.பி.மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி,
  ‘ராமன் எந்த காலேஜில் இஞ்சினியரிங் படித்தான்’ என்று கேட்டதற்கு,அவருடைய தலையை சீவி விடுவேன் என்று பேசியவர் இந்த ‘சாது’தான்.

  ram vilas

  இவர்,தபஸ்வீ சாவ்னி மடத்தின் தலைவரான பரமஹன்ஸ் தாஸ் என்பவரிடம் தன்னைத்தான் , ராமர் கோயில் அறக்கட்டளையின்  தலைவராக நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.அப்போது பரமஹன்ஸ் தாஸ் நிருத்திய கோபால் தாஸை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருக்கிறார்.இதற்கிடையே உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அறக்கட்டளையில் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்ல,அவர் வேறு மடத்தைச் சேர்ந்தவர்,அவரைச் சேர்க்கக் கூடாது என்று அதற்கும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

  இந்த உரையாடல்களை யாரோ அயோத்தி சாதுக்களின் வாட்ஸ்-அப் குரூப்களில் பரப்பி விட்டார்கள். இந்த உரையாடல்களைக் கேட்ட நிருத்ய கோபால் தாஸின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து பரமஹன்ஸ தாஸை சுற்றி வழைத்து தாக்க முயன்றனர்.

  ramvilas

  பரமஹன்ஸ தாஸுக்கு முன்பே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருந்தாலும்,போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து சில மணி நேரம் வைத்திருந்தார்கள்.ஆனால்,நிருத்திய கோபால்தாஸை ஆபாசமாகத் தாக்கிப் பேசியது குறித்து யாரும் புகார் தராததால் விடுவித்து அனுப்பி விட்டனர்.

  இது மட்டுமில்லாமல் இன்னொரு செய்தியும் உலவுகிறது.கோவில் விஹெச்பி அமைப்பிற்கு உள்ளும்,கோவிலை நாமே கட்டவேண்டும் என்று ஒரு பிரிவினரும்,உத்திரப்பிரதேச அரசு கட்டட்டடும் என்று இன்னொரு பிரிவும் முட்டிக்கொண்டு நிற்கிறார்களாம்.சாதுக்கள் மோதலைப் பார்த்து மக்கள் மிரளும் காலம் இது.