அம்மா பணம் கொடுக்காததால் கோபம்.. மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி!

  0
  13
  தற்கொலை

  கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்காக அந்த மாணவி ராஜியிடம் பணம் கொடுக்கும் படி கேட்டுள்ளார்.

  நாகர்கோவில் நித்தரவிளை அருகே உள்ள பூத்துறை சேர்ந்தவர் ராஜி. இவரின் மகள் அப்பகுதியிலிருந்த கல்லூரி ஒன்றில் முத்தாரம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்காக அந்த மாணவி ராஜியிடம் பணம் கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால், ராஜி பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாணவி வீட்டிலிருந்த அறை ஒன்றினுள் சென்று மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். 

  ttn

  வெகு நேரம் ஆகியும் மாணவி கதவைத் திறக்காததால் பதற்றம் அடைந்த ராஜி, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது, மாணவி தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதனையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து கதவை உடைத்து மாணவியை மீட்டுள்ளனர். அப்போது மாணவி உயிருடன் தான் இருந்துள்ளார். இதனிடையே தகவல் அறிந்து  வந்த போலீசார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அந்த மாணவி செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

  ttn

  இதனையடுத்து மாணவியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்மா காசு கொடுக்காததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.