அம்மா செய்த காரியத்தால் உயிரை விட்ட இளம்பெண்!

  0
  1
  சத்யா

  சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட  பிள்ளைகளுடன் வறுமையில் வாடிய மோகனா கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். 

  ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி மோகனா. இவர்களுக்கு 21 வயதில் சத்யா என்ற  மகள் மற்றும் ஒரு 18 வயதில் ஒரு மகன் உள்ளனர். சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட  பிள்ளைகளுடன் வறுமையில் வாடிய மோகனா கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். 

  murder

  இதையடுத்து மகள் சத்யாவுக்கு மாப்பிளை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேலும்  திருமணத்திற்காகத் தாய் மோகனா கடன் வாங்கியுள்ளார். ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கிறோம். கடன் வாங்கி திருமணம் செய்தால்  எப்படி அதை திருப்பி கொடுப்பாய்? என்று கேட்டு சண்டை போட்டுள்ளார்.

  இதையடுத்து அம்மா  தன்னால் தான் கஷ்டப்படுகிறார் என்று நினைத்து மனவேதனை அடைந்த சத்யா காணாமல் போகவே மோகனா அவரை அப்பகுதியில் தேடி வந்துள்ளார். 

  suicide

  பின்னர்  வீட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் சத்யா பிணமாக மிதந்துள்ளார். இதைக்கண்டு மோகனா கதறி அழவே, அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர்.  சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சத்யா உடலை மீட்டனர். இதையடுத்து  பிரேத பரிசோதனைக்காக சத்யா உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.