அம்மா உணவகங்களில் முட்டை இலவசம் : சேலம் மாநகராட்சி அறிவிப்பு

  0
  3
  amma unavagam

  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆனால், காய்கறி, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதே போல மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் நூற்றுக் கணக்கான மக்கள் தினமும் அதில் உணவு அருந்தி வருகின்றனர். குறிப்பாக வீடுகள் இல்லாமல் தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு அம்மா உணவகம் பேருதவியாக இருக்கிறது.

  ttn

  இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பவர்களை எளிதில் தாக்காது என்று தகவல் வெளியானதால், மக்களின் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்  விதமாக கபசுர கசாயத்தை குடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 11 அம்மா உணவகங்களில் இன்று முதல் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.