அம்மாடியோவ்! முகேஷ் அம்பானியின் சொத்து எவ்வளவு தெரியுமா?

    0
    3
    mukesh-ambani

    நாட்டின் டாப் கோடிஸ்வரர்கள் பட்டியலில் கடந்த 11 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கும் ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து விவரம் வெளியாகியுள்ளது

    புதுதில்லி: நாட்டின் டாப் கோடிஸ்வரர்கள் பட்டியலில் கடந்த 11 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கும் ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து விவரம் வெளியாகியுள்ளது.

    போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி 3 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இந்த நிதியாண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

    இவருக்கு அடுத்தபடியாக விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 47 கோடி ரூபாய் ஆகும். மூன்றாவது இடத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆர்சிலர் நிறுவனத் தலைவர் லட்சுமி மிட்டல் உள்ளார்.

    டாப் 10 பட்டியலில் இந்துஜா சகோதரர்கள், பலோன்ஜி மிஸ்திரி, ஷிவ் நாடார், கோத்ரேஜ் குடும்பத்தினர், திலிப் சங்வி, குமாரமங்கலம் பிர்லா, கௌதம் அதானி உள்ளனர்.