‘அமைதி…அமைதி…அமைதியோ…அமைதி’ : தொல்லை தாங்காமல் வீட்டை விட்டு ஓடியவரை மீண்டும் மனைவிடம் ஒப்படைத்த போலீஸ்!

  0
  1
  போலீசார்

  வீட்டில் தொல்லை தாங்காமல் அமைதியைத் தேடி சென்ற குப்தா தனது செல்போனை கூட  வீட்டிலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளார்

  புதுடெல்லி:   அமைதியைத் தேடி வீட்டை விட்டு ஓடியவரை போலீசார் மீட்டு  மீண்டும் மனைவியிடம் கொண்டு வந்த சேர்த்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. 

  husband

  டெல்லி பிதம்புரா பகுதியைச் சேர்ந்தவர்  கவுதம் குப்தா.  இவர் கடந்த 11 ஆம் தேதி மாயமானார். இதனால் இவரது மனைவி போலீசில் புகார் அளிக்க வழக்குப்பதிவு செய்த போலீசார், குப்தாவின் வீட்டின் காருக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததன்  மூலம் அவரை பின் தொடர்ந்தனர். 

  police

  இதையடுத்து  கோகட் என்கிளேவ் மெட்ரோ ரயில்நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் கவுதம் குப்தா 
  இருந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. இதன் மூலம் அவரை பின் தொடர்ந்ததில் அவர் உத்தரகாண்ட்  பேருந்து நிலையத்தில் இருப்பது  தெரியவந்தது. இதனால் கவுதம் குப்தாவின் குடும்பத்தினருடன் போலீசார் ஹரித்வாருக்கு சென்றனர். இதையடுத்து குப்தாவை மீட்டு மீண்டும் டெல்லிக்கு கொண்டு வந்தனர். 

  இதுகுறித்து கூறும் போலீசார், வீட்டில் தொல்லை தாங்காமல் அமைதியைத் தேடி சென்ற குப்தா தனது செல்போனை கூட  வீட்டிலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளார் என்று கூறியுள்ளனர்.