அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறை தண்டனை… சிறப்பு நீதிமன்றம் அதிரடி

  0
  1
  reddy

  பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  சென்னை: பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுரில் கடந்த 1998-ம் ஆண்டு கள்ளச்சாரயம் வியாபாரத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடினர். அப்போது பாஜகவில் இருந்தவரும், தற்போதைய தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவருமான பாலகிருஷ்ண ரெட்டி  உட்பட 108 பேர் அரசு பேருந்துகள் மீது கல் வீசி தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டி 22-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

  ஓசுர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையானது, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ 10,500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.