அமைச்சர் கருப்பண்ணனை அம்மா ஆவி சும்மா விடாது!  அதிமுக எம்.எல்.ஏ சாபம்.

  0
  5
  jayalalitha-vs-karuppannan

  தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும்,ஈரோடு புறநகர் மாவட்டச்செயலாளராகவும் இருப்பவர் கருப்பண்ணன். இவருக்கும் பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்துக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். 

  தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும்,ஈரோடு புறநகர் மாவட்டச்செயலாளராகவும் இருப்பவர் கருப்பண்ணன். இவருக்கும் பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்துக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். 

  thoppu-venkatachalam

  உள்ளாட்சிச் தேர்தல் அறிவிக்கப் பட்டதுதும் இந்தப் பிளவு இன்னும் பெரிதாகி விட்டது.ஏற்கனவே மாவட்டக் கூட்டுறவுச் சங்கப் பதவிகள் அனைத்தையும் தனது ஆதரவாளர்களுக்கே கருப்பண்ணன் வாங்கிக் கொடுத்து விட்டார் என்பது தோப்பு சைடு குற்றச்சாட்டு. உள்ளாட்சித் தேர்தலில் கட்சியில் சீட்டுத் தராததால் சுயேட்சையாக போட்டி இட்டவர்களை கருப்பண்ணன் ஆதரித்ததைச் சுட்டிக்காட்டி கருப்பண்ணன் கட்சியை அழிக்கிறார்… அவரிடம் இருந்து அமைச்சர் பதவி,அல்லது மாவட்டச் செயலாளர் பதவி , இவற்றில் ஏதாவது ஒன்றையாவது பறிக்கும்படி,ஓபிஎஸ்,ஈபிஎஸ் இருவரிடமும் புகார் சொல்லிப் பார்த்தது,தோப்பு வெங்கடாசலம் அன்கோ.

  ஒன்றும் பலிக்காததால் இப்போது ஒரு புதிய ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். பெருந்துறை தொகுதியில் செயல்படுத்தப்பட இருக்கும் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கருப்பண்ணன் கெடுக்கப் பார்க்கிறார். ஊரெங்கும் சாயக் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கும் போது அதைக்கவனிக்காமல் குத்துப் பாடல்களுக்கு ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார் அமைச்சர் கருப்பண்ணன் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.மேலும் இவரை அம்மாவின் ஆன்மா சும்மா விடாது என்றும் சாபம் கொடுதிருக்கிறார் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம்.