அமேசான் இணையதளத்தில் ‘ஃபேப் ஃபோன்ஸ் ஃபெஸ்ட்’ சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது

  0
  3
  amazon

  அமேசான் இணையதளத்தில் ‘ஃபேப் ஃபோன்ஸ் ஃபெஸ்ட்’ சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது.

  டெல்லி: அமேசான் இணையதளத்தில் ஃபேப் ஃபோன்ஸ் ஃபெஸ்ட் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது.

  அமேசான் நிறுவனம் சார்பில் அவ்வப்போது பல்வேறு சிறப்பு தள்ளுபடி விற்பனைகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது ஃபேப் ஃபோன்ஸ் ஃபெஸ்ட்என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய தள்ளுபடி விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் ஹெட்போன்ஸ், பவர் பேங்க் மற்றும் மொபைல் கேஸ்கள் ஆகியவையும் தள்ளுபடி விற்பனையில் விற்கப்பட உள்ளன. மார்ச் 25 முதல் 28-ஆம் தேதி வரை இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. இத்துடன் வங்கிகளின் தள்ளுபடி மற்றும் கூடுதல் கட்டணமில்லா தவணைத் திட்டம் போன்ற பல வசதிகள் இந்த ஆஃபருடன் இடம் பெற்றுள்ளன.

  ரியல்மி U1 ஸ்மார்ட்போன் ரூ.2,000 தள்ளுபடி பெற்று ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு அறிமுகமான ஹூவாய் ஒய்9 (2019) ஸ்மார்ட்போன் ரூ.1000 தள்ளுபடி பெற்று தற்போது ரூ.14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரூ.13,050 வரை இந்த ஸ்மார்ட்போனுக்கு எக்ஸ்சேஞ்ச் விலையைப் பெற முடிகிறது. விவோ ஒய்83 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.15,990-யில் இருந்து விலை குறைப்பு செய்யப்பட்டு தற்போது ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ஒன் பிளஸ் 6T, சியோமி எம்.ஐ A2 மற்றும் ஓப்போ எஃப் 11 ப்ரோ போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களுடன் வெளியாகியுள்ளது.