அமேசான், ஃபிளிப்கார்டுக்கு போட்டியாக களம் இறங்கும் ஜியோ!

  0
  17
  ரிலையன்ஸ்

  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் குழுமம் அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக புதிய ஷாப்பிங் தளத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

  reliance

  பல ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் சில்லறை விற்பனையில் கால்பதித்தது. அது முதல் ரிலையன்ஸ் பிரஷ், ரிலையன்ஸ் ரீட்டெய்ல் என்று வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆன்லைன் ஷாப்பிங்கின் ஜாம்பவான்களாக உள்ள ஃபிளிப்கார்ட், அமேசானுக்குக்குப் போட்டியாக ஜியோ மார்ட் என்றும் தளத்தை தொடங்க உள்ளதாக ரிலையன்ஸ் ரீட்டெய்ல் அறிவித்துள்ளது. 

  jio

  முதல் கட்டமாக மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை, தானே, கல்யாண் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மார்ட் மூலம் சேவை வழங்கப்படும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நாடு முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று ரிலையன்ஸ் ரீட்டெய்ல்ஸ் அறிவித்துள்ளது. ஜியோ மார்ட் மூலம் பல கோடிக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  jio

  ரிலையன்ஸ் ஜியோ வருகையால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. ரிலையன்ஸ் ஜியோ மார்ட் மூலம் என்ன நடக்கப்போகிறதோ, என்ன என்ன சலுகைகள் கிடைக்கப்போகிறதோ என்று இப்போதே பலரும் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.