அமெரிக்க அறிவியல் அறக்கட்டளைக்கு தலைவராகும் தமிழர்!

  0
  2
  சேதுராமன் பஞ்சநாதன்

  சென்னை விவேகானந்தா கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றவர் சேதுராமன் பஞ்சநாதன்.அதன் பிறகு பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிலையத்தில் தகவல் தொடர்பு துறையில் இளநிலைப்பட்டம்,சென்னை ஐ.ஐ.டியில் எலெக்ட்ரிக் பொறியியல் துறையில் முதுகலை,கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் என்று தன்னை வளர்த்துக்கொண்ட பஞ்சநாதன் இப்போது அரிசோனா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவராக இருக்கிறார்.

  sethuraman

  நண்பர்களிடையே ‘பஞ்ச்’ பஞ்சநாதன் செய்திருக்கும் சாதனைகளும், ஆய்வுகளும் விக்கிப் பீடியாவில் கிலோமீட்டர்கள் நீளத்துக்கு நீள்கின்றன. தகவல் தொடர்பு துறைக்கு நோபல் பரிசு இருந்திருந்தால் அதை பஞ்சநாதனுக்கு எப்போதோ கொடுத்து இருப்பார்கள்.செளமியா என்கிற மனைவியும் இரண்டு பிள்ளைகளுமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் பஞ்சநாதனுக்கு புதிய மரியாதை மிக்க பதவியை கொடுத்து இருக்கிறார் பிரசிடெண்ட் ட்ரம்ப்.

  அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளை ,அந்த நாட்டில் மருத்துவம் சாராத அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகளுக்கு உதவி செய்கிறது. இதுதவிர அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு அறிவியல் ஆய்வுகளிலும் இந்த அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

  இந்த அறக்கட்டளைக்கு தற்போது இயக்குனராக 14வது இருந்து வரும் ஃபிரான் கார்டோவா வரும் ஜனவரியில் ஓய்வு பெறுகிறார்.அதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு பஞ்சநாதன் சேதுராமனை தேர்வு செய்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.