அமெரிக்க அதிபரிடம் மோடி பேசியதால் ஆச்சரியமும், வேதனையும் ஏற்பட்டது….. சொன்னது வேறயாருமில்ல நம்ம அசாதுதீன் ஓவைசி தாங்க….

  0
  1
  அசாதுதீன் ஓவைசி

  காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பிரதமர் மோடி பேசியது தனக்கு ஆச்சரியமும், வேதனையும் ஏற்பட்டதாக ஹைதராபாத் எம்.பி. அசாசுதீன் ஓவைசி கூறினார்.

  பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது தொடர்பாக அவரிடம் மோடி கூறினார். டிரம்பிடம் மோடி பேசியது தனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

  மோடி

  இது தொடர்பாக ஓவைசி கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் இருதரப்பு விவகாரம் என்று ஆரம்பம் முதலே நாம்  சொல்லி வருகிறோம். இந்தியா அதில் மிகவும் உறுதியாக உள்ளது. அப்புறம் ஏன் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் போனில் பேச வேண்டிய அவசியம் என்ன? மற்றும் அது (காஷ்மீர்) தொடர்பாக டிரம்பிடம் புகார் கூறியது ஏன்?

  டிரம்ப்

  டிரம்ப் யாரு நமக்கு? உலக போலீஸ்காரரா? அல்லது பலமான மனிதரா? காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்பிடம் மோடி போனில் பேசியதால் நான் மிகவும் ஆச்சரியமும், வேதனையும் அடைந்தேன். மோடியின் இந்த நடவடிக்கை டிரம்ப் முன்பு கூறியதை உறுதிப்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரம் இருதரப்பு பிரச்சினை அதில் மூன்றாம் நபர் குறுக்கீடுவதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.