அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது

  0
  5
  america

  அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை உயிரிழந்தனர்.

  வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை உயிரிழந்தனர்.

  கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 15 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

  ttn

  இந்நிலையில், அமெரிக்கா நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14795-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்து 3-வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் நாட்டில் 1900க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 435,128 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.