அமெரிக்காவில் ஆச்சரிய காதல்: ஆன்லைன் காதலனுன்கு சிறுநீரகம் தந்த பெண்! 

  24
  மாதிரி படம்

  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் டாம் சம்மர்ஸ். இவருக்கு 20 வயதில் கீல்வாத நோய் ஏற்பட்டுள்ளது. இதனால், இவருடைய உறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிவித்திருந்தனர். 

  online

  டாம் சம்மர்ஸ்க்கு 30 வயது ஆன போது, அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இதனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு பெயர் பதிவு செய்துவிட்டு டயாலிசிஸ் செய்துவந்துள்ளார். டாம் சம்மர்ஸ் ரத்தம் மிக அரிய வகையைச் சேர்ந்தது. இந்த பிரிவில் அவருக்கு சிறுநீரகம் கிடைப்பதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு என்றே மருத்துவர்கள் கூறிவந்தனர்.
  இந்தநிலையில் ஆன்லைன் சேட்டிங்கில் சம்மர்ஸ்சுக்கு லீசா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாள் சேட்டிங்கில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, தன்னுடைய நிலை பற்றி சம்மர்ஸ் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தான் சிறுநீரகம் கொடுக்க இயலுமா என்று லீசா பரிசோதனை செய்துகொண்டார். அப்போது சம்மர்ஸ்சுக்கு அது மிகச்சரியான சிறுநீரகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுத்தார் லீசா.

  couple

  இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வெற்றிகரமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருவரும் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். தற்போது, சிறுநீரக தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர். ஒரு சிறுநீரகத்துடன் தான் எப்படி ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன், தான் ஒரு சிறுநீரகத்தை தானமாக அளித்ததன் மூலம் சம்மர்ஸ் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் லீசா. 
  அன்புக்கு எந்த எல்லையும் இல்லை என்பதை தம்பதியினர் நிரூபித்துள்ளனர்.