அமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்!

  0
  11
  ஓபிஎஸ்

   காந்தியடிகளின் பெயரிலான “மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்” விருது வழங்கப்பட்டது. 

  தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

  ops

  ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோ ஓக் புரூக் டெரேஸில் ,  சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக “தங்கத் தமிழ் மகன்” விருதும்,  உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்  “சர்வதேச வளரும் நட்சத்திரம் விருதும்” வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று  காந்தியடிகளின் பெயரிலான “மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்” விருது வழங்கப்பட்டது. 

  ops

  இந்நிலையில் ஓபிஎஸ்  ஹுஸ்டன் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ததோடு,  அங்கு புதுப்பிக்கப்பட்ட மண்டபம் ஒன்றையும் திறந்து வைத்தார். 

  ops

  முன்னதாக தமிழ் அமைப்புகள் நடத்திய விழாவில் கடந்த  நவ.14 ஆம் தேதியை “ஓபிஎஸ் நாள்” என அறிவித்த அவர்கள், துணை முதல்வருக்கு  பண்பின் சிகரம் விருது, வீரத்தமிழன் ஆகிய பட்டங்களைக்  கொடுத்து கவுரவப்படுத்தினர்.