அமுதசுரபியாய் அள்ளித் தரும் அண்ணாசாலை பச்சையம்மன் ஆலயம்

  25
  பச்சையம்மன் ஆலயம்

  சென்னையின் பரபரப்பான அண்ணாசாலையில் எல்.ஐ.சி கட்டிடத்தின் எதிரே இப்படி ஒரு கிராமம் இருப்பதே நிறைய பேருக்குத் தெரியாது. ஆமாம்… நாம் கோயிலுக்குச் செல்லும் போது, கிராமத்திற்குள் நுழைகிற மாதிரி தான் இருந்தது. நிறைய பேருக்கு அண்ணாசாலை தர்காவைச் சொன்னால் தெரியும். அடுத்த முறை பரபரப்பான அண்ணாசாலையைக் கடக்கும் போது, அந்த தர்காவிற்கு பின்புறம்  கிராமத்து சூழலில் காட்சி தருகிற பச்சையம்மனை மறக்காமல் தரிசித்து பலனடையுங்கள்.

  amman

  பசியும், பட்டினியும், பஞ்சமும்  நிறைந்த அந்தக் காலத்தில் மக்களின் பசிப்பிணியையும், பஞ்சத்தையும் போக்கவும், அசுரர்களிடமிருந்து மக்களை காப்பாற்றவும், பசுமை நிற மரகத பல்லக்கில், சப்த ரிஷிகளுடன் குதிரைப்படை சூழ கயிலையிலிருந்து அன்னை பராசக்தி ஊர்வலம் சென்றாள். மரகத பல்லக்கின் ஒளியால் பராசக்தியும் பச்சை நிறத்திலேயே காணப்பட்டாள்.
  அம்பிகையின் ஊர்வலம் சென்ற இடமெல்லாம் பச்சை ஒளி பரவி, பஞ்சம் நீக்கி பசுமையை படர விட்டாள். ஊர்வலத்தில் எதிர்பட்ட பஞ்சம் மட்டுமல்ல, சூரகோபன் முதலான அசுரர்களையும் காளி ரூபத்தில் வதம் செய்தாள் அன்னை பராசக்தி பச்சையம்மன். இந்த பூலோகமே பசுமை அடைந்தது. அனைத்து மக்களும் ஆனந்த பரவசத்தில் அம்பிகையை சரணடைந்தார்கள். அச்சமயத்தில் பராசக்தி பலவாய் விரிந்து  இப்பூலோகம் எங்கிலும் ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு சக்தியாய் கோயில் கொண்டாள். அதில் ஒன்று தான் இந்த பச்சையம்மன்.

  amman

  பெயருக்கு ஏற்றாற் போல் அம்மன் பசுமை நிறத்தோடே காட்சி அளிக்கிறாள். எழில் வடிவோடு தம் அருட் கடாட்சத்தால் நம் மனதை கொள்ளை கொள்ளும் பச்சை அம்மன் மூலவரையும், உற்சவரையும் ஒரு சேர தரிசிக்க நம் வாழ்வில் அனைத்து இன்பங்களும் வந்து சேரும். திருமுல்லைவாயில், நாகப்பட்டினம், ஆரணி போன்ற ஊர்களில் உள்ள பச்சையம்மனைப் போலவே அண்ணாசாலை பச்சையம்மனும் பழமை வாய்ந்தவள்.
  இந்த பச்சையம்மனை உள்ளம் உருக பிரார்த்தித்தால் கேட்பதை எல்லாம் கொடுக்கிற அமுத சுரபியாய்  நம் வாழ்வை பசுமையாக்குவதோடு, மகிழ்ச்சியாக, புத்துணர்ச்சியுடன், மனநிறைவோடு நம்மை வாழவைப்பாள்.