அமித் ஷாவை நேரடியாகவே சீண்டிய அதிமுக முக்கியப்புள்ளி… ஆடிப்போன ஓ.பி.எஸ்..!

  0
  1
  ஓ.பி.எஸ்

  அதிகாரம் உள்ளது என்பதற்காக மற்றவர்களின் உணர்வு, சிந்தனை, எண்ணங்களை உதாசீனம் செய்தால் வீழ்ச்சிக்கு வித்திடும்’’ என்று நேரடியாகவே சீறினார்.

  நெல்லையில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் மைக் பிடித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,  மத்தியில் ஆளும் பாஜகவை ஒரு பிடி பிடித்தார்.

  modi

  ஏற்கெனவே ஒரே தேசம், ஒரே மொழி என்ற பாஜக தலைவர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் கே.பி.முனுசாமியும் தன் பங்குக்கு பாஜகவை சாடினார். ’’வட மாநிலத்தவருக்கு நாம் அடிமையாகக் கூடாது என்பதற்காக தனி தமிழ்நாடு கோரிக்கையை முதல் முதலாக எழுப்பியவர் அண்ணா. 1965ல் மத்திய அரசு இந்தியை ஆட்சிமொழியாக அறிவித்தது.

  OPS

  மாணவர்கள், இளைஞர்கள் அணி திரண்டு மொழி போராட்டம் வெடித்ததால், மத்திய அரசு அறிவித்த இந்தி ஆட்சி மொழியை ரத்து செய்தது. தற்போது அமித் ஷா ஒரே நாடு, ஒரே மொழி எனவும், இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களை வரவேற்கிறோம்.ops

  ஆனால் , ஒரு மாநில மக்களின் உணர்வு, மொழி, கலாச்சாரத்தில் பாஜக கை வைத்தால் வீழ்ச்சியடையும். அதிகாரம் உள்ளது என்பதற்காக மற்றவர்களின் உணர்வு, சிந்தனை, எண்ணங்களை உதாசீனம் செய்தால் வீழ்ச்சிக்கு வித்திடும்’’ என்று நேரடியாகவே சீறினார். இதை அதிமுகவினரே எதிர்பார்க்கவில்லை. இவர் ஓ.பி.எஸ் ஆதரவாளர் என்பதால் அவரும் ஆடிப்போய் கிடக்கிறாராம்.